லயோலா கல்லூரி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்களது உடல் நிலை காரணமாக இன்றைய தினம் அதிகாலை வைத்தியசாலைக்கு பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி லயோலா கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக ஈடுபட்டிருந்த நிலையில் நள்ளிரவுக்குப் பின்னர் அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கோயம் பேட்டுக்குச் சென்ற பொலிஸார் இவர்களைப் பலவந்தமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு மாணவர்களுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் ஏனைய அனைத்து தமிழ் கட்சிகளும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


0 comments
Write Down Your Responses